இலங்கையில் அமைதி நிலவ இந்தியாவில் மணல் சிற்பம்..!

இலங்கையில் அமைதி நிலவ இந்தியாவில் மணல் சிற்பம்..!

Update: 2022-05-11 15:41 GMT

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்த்து பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதால், நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.


ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை பகுதியில், ‘அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ எனும் தலைப்பில் வடித்துள்ள அந்த மணல் சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Similar News