சனிக்கிழமை விடுமுறை.. தமிழக அரசு நடவடிக்கை..!
சனிக்கிழமை விடுமுறை.. தமிழக அரசு நடவடிக்கை..!
தமிழகத்தில், நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
ஓரளவு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு மீதமுள்ள பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.