மிரட்டும் புதிய ஹேக்கிங் : மக்களே எச்சரிக்கை!!
மிரட்டும் புதிய ஹேக்கிங் : மக்களே எச்சரிக்கை!!
எஸ்எம்எஸ் மற்றும் கால்கள் மூலம் மொபைலில் உள்ள டேட்டாக்கள் திருடப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இண்டர்நெட் உலகில் பாதுகாப்பு அம்சங்கள் என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் புதிய டெக்னிக்குகள் வெளி உலகுக்கு தெரிந்த பிறகுதான், அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு அதில் இருந்து தப்பிக்க புதிய டெக்னாலஜி கண்டுபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது “டோல் பிராட்” என்ற ஹேக்கிங் வைரஸ் மொபைல் ஃபோனுக்குள் ஊடுருவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹேக்கிங் வைரஸ் மொபைலுக்குள் நுழைந்ததும் ஒன் டைம் பாஸ்வேர்டை மாற்றிவிடும்.
இதனால் நாம் சப்ஸ்கிரைப் செய்யாத பல ஆப்கள் சப்ஸ்கிரைப் செய்யப்படும். பின்னர் அது செக்யூரிட்டி ஆப்ஷனையே ஒன்றும் இல்லாம் செய்துவிடும். இதுகுறித்து கூகுள் பிளே ஸ்டோருடன் பேசி வருவதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in