அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Update: 2022-06-25 05:35 GMT

 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று (ஜூன் 24) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பொதுப்பிரிவில் 31 சதவீதமும் ,எஸ்டி பிரிவில் 1 சதவீதமும், எஸ்சி பிரிவில் 18 சதவீதமும், எம்பிசி பிரிவில் 20 சதவீதமும், பிசிஎம் 3.5 சதவீதமும் மற்றும் பிசி பிரிவில்  26.5 சதவீதமும் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, முதலில் பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மேல்நிலைப்பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்தவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Similar News