ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளி கல்வித்துறை..!!
ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளி கல்வித்துறை..!!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங் மூன்று மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அதன்படி, மூவாயிரம் ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஓராண்டு பணி நீட்டிப்பிற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.