பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம்.. மருத்துவ மாணவர், துணை நடிகர், பேராசிரியர் என 4 பேர் கைது !!

பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம்.. மருத்துவ மாணவர், துணை நடிகர், பேராசிரியர் என 4 பேர் கைது !!

Update: 2022-02-28 20:00 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கொடூரத்தின் உச்சமாக உள்ளது. 

அதாவது, சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ராமாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த்கிரிஷ் (20) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

பழக்கம் காரணமாக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசத்தொடங்கினர். அப்போது வசந்த்கிரிஷ் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய மாணவி காதலன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து பெற்றோர்  விசாரித்தப்போது, மகள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதும், மருத்துவ மாணவர் வசந்த்கிரிசை காதலிப்பதும் தெரிந்தது. மேலும் வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து கூட்டாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 

இதனையடுத்து, மாணவியின் காதலன் வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார் என்கிற பாலசிவாஜி, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பகுதிநேர பேராசிரியரான பிரசன்னா, கல்லூரி மாணவரான விஷால் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நான்கு பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக மாணவியை உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்ததாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.


ஆரம்பத்தில் காதலன் வசந்த்கிரிஷ் தங்கி உள்ள வீட்டுக்கு மாணவி சென்ற போது அவருக்கு ஹூக்கா போதைப்பொருள் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கொடுத்து போதைக்கு அடிமையான பின்னர் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார், நண்பர்களும் மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போதைப்பொருள் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காதலன் வசந்த்கிரிஷ், சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அனைவரது செல்போன்களிலும் மாணவியுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் இருந்துள்ளது. அதனை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 newstm.in

Similar News