விபத்தில் அப்பளமாக நொறுங்கிய கார் – பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

விபத்தில் அப்பளமாக நொறுங்கிய கார் – பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

Update: 2022-02-21 08:15 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தமிழ்வாணன் (16), தினேஷ் (17), ஸ்ரீ (15) , கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17) , ஹரிகிருஷ்ணன் (17) ஆகிய 6 பேரும் காரில் மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அம்மாபாளையம் பகுதியை கடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியில் பின்புறமாக அதிவேகமாக மோதி அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த தமிழ்வாணன் (16) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். உடன் இருந்த ஐந்து பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஐந்து பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீஸார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News