புதிய அரசாணையால் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி!!

புதிய அரசாணையால் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி!!

Update: 2022-04-04 08:02 GMT

தமிழக அரசின் புதிய அரசாணையால் பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு படிப்படியாக நிவர்த்தி செய்வதாக தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

பல்லாண்டு காலமாக ஆசிரியர்கள் வைத்து வரும் கோரிக்கையான சிபிஎஸ்இ ரத்து மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை சட்டமன்ற கூட்டதொடரில் நிச்சயமாக 110 விதியில் அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் அரசுக்கு வைக்கிறோம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

மாவட்ட கலந்தாய்வு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதே போன்று மாணவர்களின் வருகைப்பதிவு, சத்துணவு, மாத்திரைகள், மாணவர்கள் மருந்து உண்பது, காய்கறிகள் உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி இருக்கிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அதே போல் புள்ளி விபரத்தை காலையில் கொடுத்து 1 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்பது பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக ஆணையரிடமும், அமைச்சரிடமும் பேசி இருக்கிறோம்.

தமிழகத்தில் ஈராசிரியர் பள்ளிகள், ஓராசியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இதில் புள்ளி விபரங்களை எடுக்க சாத்தியமில்லை. புள்ளிவிபரம் தேவை என்றால் கணினியில் பட்டம் பெற்றவர்கள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு புள்ளிவிபரம் எடுக்கும் பணியை வழங்கலாம்.

101 அரசாணை தொடக்கக் கல்வித் துறை தனித்துறை ஆக்கி முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். 101 அரசாணையால் கோப்புகள் தேக்கம் அடைந்து ஆசிரியர்களின் முழு பண பயன் பெற முடியாமல் பாதிக்கப்படுகிறது.

எனவே 101 அரசாணை ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியுள்ளார்.

newstm.in

Similar News