கழன்று சுழன்றது பள்ளி வேன் டயர்.. சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் குழந்தைகள்..!
கழன்று சுழன்றது பள்ளி வேன் டயர்.. சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் குழந்தைகள்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை சாலையில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி விவேகம் மேல்நிலைப் பள்ளியின் வேன் சென்றுகொண்டிருந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.
திடீரென, இந்த வேனின் பின்பக்க டயர் கழன்று சாலையில் ஓடியது. இவ்விபத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, ‘வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தி தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்த வேண்டும்’ என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.