காதலனுக்காக சாலையில் கட்டி உருண்டு பள்ளி மாணவிகள் மோதல்.. வைரலாகும் வீடியோ !!
காதலனுக்காக சாலையில் கட்டி உருண்டு பள்ளி மாணவிகள் மோதல்.. வைரலாகும் வீடியோ !!
புகழ்பெற்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் கட்டிப்புரண்டு சரமாரியாக மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,
பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவிகள் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். கையில், பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்வதும், இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்வதும் என சற்றே ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.
மேலும், அந்த வீடியோவில், இரு மாணவிகள் படிக்கட்டில் இருந்து விழுகின்றனர். அதில் ஒரு மாணவி இரும்பு கிரில்லில் வசமாக தள்ளிவிடப்படுகிறார். இதில், அவரது மூக்கு உடைந்து இரத்தம் கொட்டுகிறது. மோதல் உச்சக்கட்டத்துக்கு செல்லும் சூழலில் அங்கிருந்த சில மாணவர்கள், மாணவிகளின் மோதல்களை ஒருவழியாக தடுத்தனர்.
இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை. இந்த மோதல் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை, யார்மீதும் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.
எனினும் மாணவ, மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, காதலனுக்காக மாணவிகள் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, மாணவி ஒருவரின் காதலனை மற்றொரு மாணவி வெளியே அழைத்துசென்று ஊர்சுற்றி வந்துள்ளார்.
இந்த விவகாரம் காதலிக்கு தெரியவரவே தனது ஆதரவாளர்களுடன் சென்று தட்டிக்கேட்டு மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மோதல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
An incident of girl students' of a reputed school in #Bengaluru indulging in street fighting in full public view went viral on Wednesday. pic.twitter.com/JtdQVcbSzH
— IANS (@ians_india) May 18, 2022
newstm.in