கனமழையால் இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !!
கனமழையால் இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !!
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் கொட்டுவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்து. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொட்டும் கனமழையால் அங்குள்ள நடுமலை, வெள்ளிமலை டனல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு வினாடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கேரளாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in