கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்..!

கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்..!

Update: 2022-06-09 15:07 GMT

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலையில், இந்த கல்வியாண்டில் முழுமையாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது;

“அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து மாணவர்கள் வருகைக்காக தயார்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் உள்ள கரும்பலகைகளுக்கு பெயின்ட் அடிக்க வேண்டாம். உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களை சரி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் உடைந்த இருக்கைகள் இருந்தால் அதை அகற்ற வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொள்ளலாம். இப்பணிகளுக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்டவர்களிடம் இருந்து எந்த ஒரு நிதியும் வசூல் செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Similar News