தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும்.
மேலும், பள்ளிகளில் உள்ள மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை நடத்தி, அவ்வாறு இருந்தால் சீர் செய்ய வேண்டும்.
சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று, பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ம் தேதி (நாளை மறுநாள் ) பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும். பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.