மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

Update: 2022-03-02 13:48 GMT

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்று முதல் 5-ம் வகுப்புகளுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Similar News