செல்பி எடுத்ததால் மனைவிக்கு கத்திக்குத்து.. மாமியார் வீட்டில் கணவர் அடைக்கலம் !!
செல்பி எடுத்ததால் மனைவிக்கு கத்திக்குத்து.. மாமியார் வீட்டில் கணவர் அடைக்கலம் !!
உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்போது மாமியார் வீட்டில் பாதுகாப்பாக உள்ளார்.
கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியில் எட்வர்ட் ஜான் - கிரேஸ் பியூலா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி மதுஅருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதன்காரணமாக குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கிரேஸ் பியூலா தனது கணவர் மற்றும் மகளுடன் திருமணத்தில் கலந்துகொண்டார். மேலும் திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது கிரேஸ் பியூலா உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார்.
இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் மீண்டும் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார்.
எனினும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த கிரேஸ் பியூலா தனது தாய்க்கு இந்த தகவலை கூறியுள்ளார். உடனடியாக விரைந்துசென்ற உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்தனர்.
newstm.in