காவல் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு... திடீர் பதற்றம் !!
காவல் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு... திடீர் பதற்றம் !!
காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சந்தானகிருஷ்ணன். இவர் நேற்றிரவு தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென ஆனந்தனை அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் அவர்களை தடுக்கமுயன்றதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் ஆனந்தனையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இருவரும் வெட்டுக்காயங்களுடன் போராடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் பேச முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதலின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்க போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
காவல்துறை அதிகாரிக்கு அரிவாள் வெட்டுவிழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் பேக்கரியில் வைத்து பட்டபகலில் வெட்டிகொலை செய்த அதிர்ச்சி அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் நடந்த இந்த சம்பவம் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in