"சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. அதற்கு சாட்சி இருக்கிறது" - ஜோதிமணி மீண்டும் புகார்
"சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. அதற்கு சாட்சி இருக்கிறது" - ஜோதிமணி மீண்டும் புகார்
பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மீண்டும் பகீரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் அதனை எதிர்த்தது. இதற்கு சீமான் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராகுல்காந்தியையும் விமர்சித்தார். அப்போதே சீமானை கடுமையாக விமர்சித்திருந்தார் ஜோதிமணி.
இந்த நிலையில், இன்று கரூரில் எம்பி. ஜோதிமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதற்கு பதில் சொன்ன எனக்கு தனிப்பட்ட வகையில் ஆபாசமாக பதில் கூறியிருக்கிறார் அவர். நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் உண்மை இல்லையென்றால் இது குறித்து சீமான் நீதிமன்றத்தில் ஏன் நஷ்ட ஈடு வழக்கு போடவில்லை? அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது புதிதல்ல; பாஜகவின் பி டீம்தான் நாம் தமிழர் கட்சி.
கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என கூறியுள்ளார். இதற்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்கள் உழைத்து வாழக்கூடியவர்கள். சீமான்போல இலங்கை தமிழ் மக்களை, தமிழர்களை சுரண்டி ஆடம்பர, உல்லாச வாழ்க்கை வாழக்கூடியவர்கள் இல்லை. கரூர் மக்களை குறித்துப் பேச சீமானுக்கு அருகதை இல்லை என ஆக்ரோஷமாக பேசினார்.
அப்போது, சீமான் மீது பாலியல் வழக்கு, நீதிமன்ற தீர்ப்பு இல்லையென்றபோதும் எதன் அடிப்படையில் சீமானை பாலியல் குற்றவாளி என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, நடிகை விஜயலட்சுமி பொதுவெளியில் சீமான் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதற்கு ஏன் சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம். சீமான் பாலியல் குற்றவாளி இதற்கு என் மீது கூறியதே சாட்சி என்றார்.
newstm.in