ஓராண்டுக்குள் இரண்டாவது சாம்பியன் கோப்பை.. அசத்தும் மெஸ்ஸி !!

ஓராண்டுக்குள் இரண்டாவது சாம்பியன் கோப்பை.. அசத்தும் மெஸ்ஸி !!

Update: 2022-06-03 09:03 GMT

‘ஃபினாலிசிமா’ கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி அர்ஜென்டீனா சாம்பியன் ஆனது.

தென் அமெரிக்க கால்பந்து சங்கம் (கான்மெபோல்), ஐரோப்பிய கால்பந்து சங்கம் (யுஇஎஃப்ஏ) இணைந்து நடத்துவதாகும் ‘ஃபினாலிசிமா’ கோப்பை கால்பந்து போட்டி. இப்போட்டியில் நடைபெறும் ஒரே ஆட்டத்தில் கோபா அமெரிக்கா சாம்பியனாக இருக்கும் அணியும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கோப்பை வென்ற அணியும் மோதும்.

‘கப் ஆஃப் சாம்பியன்ஸ்’ என்ற பெயரில் முதன் முதலாக 1985-இல் நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் சாம்பியனாக, 1993-இல் அர்ஜென்டீனா வாகை சூடியது. அதன் பிறகு நீண்ட காலமாக நடத்தப்படாத இப்போட்டி, தற்போது ‘ஃபினாலிசிமா’ என்ற பெயரில் மீண்டும் நடத்தப்பட்டது.

லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில், நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டீனாவுக்காக லௌதாரோ மாா்டினெஸ் (28’), ஏஞ்ஜெல் டி மரியா (45+1’), பௌலோ டைபாலா (90+4’) ஆகியோா் கோலடித்தனா். இதன்மூலம் இத்தாலி வீழ்த்தி ஃபினாலிசிமா கோப்பையை இரண்டாவது முறையாக அர்ஜென்டீனா அணி கைப்பற்றியது.

ஓராண்டு காலத்துக்குள்ளாக மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா வென்றிருக்கும் 2ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் கோபா அமெரிக்கா சாம்பியன் ஆகியிருந்தது அர்ஜென்டீனா. ஒரு கேப்டனாக தனது தேசிய அணிக்கு மெஸ்ஸி பெற்றுத் தந்த முதல் பெரிய அளவிலான சாம்பியன் கோப்பை அது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
newstm.in

Similar News