முதியோர் உதவித்தொகை.. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு..!
முதியோர் உதவித்தொகை.. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (18-ம் தேதி) வருவாய்த் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “அனைத்து சான்றிதழ்களும் செல்போன் மூலம் பெறும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வருவோம்.
ஒரு சான்றிதழை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்ற வரையறையை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.
சாதிச் சான்றிதழை 7 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதே இருக்கக்கூடாது.
இதனால் செல்போனில் வசதிகள் கிடைக்க வேண்டும். இ-சேவை மையத்தில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், முதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்படும். நடப்பாண்டில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும். 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.