மூத்த தலைவர் கபில் சிபல் காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்!!
மூத்த தலைவர் கபில் சிபல் காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்!!
அன்மையில் நடந்த 5 சட்டமன்ற தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும், பஞ்சாப்பில் ஆட்சியை ஆம் ஆத்மிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, காங்கிரஸ் மேலிடம் கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. மேலும் ஜி23 குழுவின் தலைவர்களுடனும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில் உத்தர பிரதேச ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக சமாஜ்வாதி ஆதரவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் கபில் சிபல். அப்போது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் உடனிருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 16-ம் தேதி விலகிவிட்டேன். தற்போது சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தனக்கு ஆதரவு அளிக்கும்” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில் சிபல். மூத்த வழக்கறிஞரான இவர் 2004 முதல் 2014 வரையிலான மத்திய காங்கிரஸ் அரசில் மிக சட்டம், தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். 2016 முதல் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.