பரபரப்பு.. திமுக பிரமுகர் மது விருந்து.. அழகிகளுடன் உற்சாக நடனம்..!
பரபரப்பு.. திமுக பிரமுகர் மது விருந்து.. அழகிகளுடன் உற்சாக நடனம்..!
திருச்சியில், திமுகவைச் சேர்ந்த ஒன்றிய தலைவர், கட்சியினருக்கு மது விருந்து கொடுத்து அழகிகளுடன் நடனமாடிய சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய தலைவராக பதவி ஏற்றார்.
ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட துரைராஜ், பனையபுரம் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய நிர்வாகிகளுக்கு மது விருந்து கொடுத்து, அழகிகளுடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அடாவடியும், மிரட்டல் போக்கும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திமுக ஒன்றிய தலைவர் மது விருந்து கொடுத்து, அழகிகளுடன் உல்லாச நடனமாடிய வீடியோ வெளியாகி இருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.