பரபரப்பு.. பிரபல யூ-டியூபர் உருவபொம்மை எரிப்பு..!
பரபரப்பு.. பிரபல யூ-டியூபர் உருவபொம்மை எரிப்பு..!
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘இரவின் நிழல்’.
இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.
‘இரவின் நிழல்’ படம் கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் குறித்து திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் யூ-டியூப் சேனலில் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகம் எதிரே பார்த்திபன் ரசிகர்கள் சங்கத் தலைவர் பாண்டி செல்வம், செயலாளர் குமரன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கூடினர்.
அவர்கள், திடீரென புளூ சட்டை மாறன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து கோஷங்கள் எழுப்பினர்.இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.