பரபர கடத்தல் சீன் : திமுகவை முந்திய அதிமுக!!
பரபர கடத்தல் சீன் : திமுகவை முந்திய அதிமுக!!
ராமேஸ்வரத்தில் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவுக்காக தி.மு.க – அ.திமு.கவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி, ராமேஸ்வரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சி, தொண்டி பேரூராட்சி மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிலையில், ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 8இல் தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சங்கர் வெற்றி பெற்றார். அவர், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க வினர் காரில் சென்று கொண்டே பேசலாம் என அழைத்தனர்.
அதே சமயம், தி.மு.கவினர் சுயேச்சை வேட்பாளர் சங்கரை காரில் ஏறவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். அவரை, இருகட்சியினரும் காரில் பின்தொடர்ந்து சென்றனர்.
பின்னர் அவரை அதிமுகவினர் காரில் இழுத்து கடத்திச் சென்றனர். வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் சங்கர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கட்சி சார்பில் போட்டியிட சீட் வழங்கபடாததால், சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in