மகளிருக்கு தனி கழிப்பறை – எஸ்பிஐ வங்கி உத்தரவு!!

மகளிருக்கு தனி கழிப்பறை – எஸ்பிஐ வங்கி உத்தரவு!!

Update: 2022-03-06 09:14 GMT

இனி எல்லா எஸ்பிஐ வங்கிகளிலும் மகளிருக்கு தனி கழிப்பறை அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எஸ்பிஐ வங்கி தலைவருக்கு கடிதம் என்று எழுதியிருந்தார். அதில், வங்கியில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு என்று அந்தந்த அலுவலகங்களில் தனி கழிப்பறை கட்டாயம் வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதனை பெற்றுக்கொண்ட ஸ்டேட் பாங்க் அவருக்கு பதில் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், 2018ஆம் ஆண்டு மகளிருக்கு என்று தனி கழிப்பறை அனைத்து அலுவல்களிலும் நிறுவ கோரி உத்தரவிட்டு இருந்தோம்.

இருப்பினும் நீங்கள் அனைத்து அலுவலகங்களிலும் மகளிர் கென்று தனி கழிவறை அமைத்திட வேண்டும் எனக் கூறியதன் அடிப்படையில் மீண்டும் அனைத்து கிளைகளிலும் தனி கழிப்பறை அமைந்துள்ளதா என கண்காணிக்க உள்ளோம்.

அவ்வாறு நிறுவப்படவில்லை என்றால் தனி கழிவறை அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று எஸ்பிஐ மேம்பாட்டு துணை மேலாண்மை இயக்குனர் ஓம்பிரகாஷ் மிஸ்ரா, வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், தனி கழிப்பறை இல்லாத அலுவலகங்களில் கழிப்பறை அமைத்திட உடனடியாக கட்டிட உரிமையாளர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

Similar News