காதலர்களை போல தனித்தனியாக.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன வெற்றி ரகசியம்..!
காதலர்களை போல தனித்தனியாக.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன வெற்றி ரகசியம்..!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “முதல்வர் ஸ்டாலின் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி 25 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருக்கும். இந்த ஆட்சியின் பலன்கள் மக்களுக்கு சென்றடைய, நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.
ஓட்டு சேகரிக்கச் செல்லும்போது கும்பலாகச் சென்றால் ‘உங்களுக்குத் தான் ஓட்டு போடுவேன்’ என்று சொல்லி மண்டையை மட்டும் வேகமாக ஆட்டுவார்கள், அதை நம்ப வேண்டாம்.
நீங்கள் கும்பலாகச் செல்லாமல், காதலர்களைப் போல தனித்தனியாகச் சென்று வாக்காளர்களை சந்தித்தால் நமக்கு ஓட்டு கிடைக்கும். சுலபத்தில் வெற்றி பெற்று விடலாம்” என்று அவர் பேசினார்.