ப்ளூ சட்டை மாறனுக்கு சீரியல் நடிகர் வார்னிங்!!

ப்ளூ சட்டை மாறனுக்கு சீரியல் நடிகர் வார்னிங்!!

Update: 2022-03-05 08:01 GMT

நடிகர் அஜித்தின் உடல் அமைப்பு குறித்து கேலி செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு பிரபல சீரியல் நடிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை பிரபல விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

அஜித்துக்கு முகத்தில் தொப்பை விழுந்துள்ளது என்று மட்டமாக விமர்சனம் செய்திருந்தார். அவரது விமர்சனத்துக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்தது.

ஆனால் தனது தவறை ஒப்புக்கொள்ளாத ப்ளூ சட்டை மாறன், தான் பேசியது சரிதான் என்பதை போல டிவிட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான ராகவேந்திரன் புலி, ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராகவேந்திரன், என்னங்க சொன்னீங்க அஜித் சார? மூஞ்சில தொப்பை விழுந்திருக்கா?? சார் தப்பா நினைக்காதீங்க, நீங்க என் கண்ணுல பட்டா உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்ல, சாரி என எச்சரித்துள்ளார்.

கனா காணும் காலங்கள் சீரியலில் புலி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார் ராகவேந்திரன். காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

newstm.in

Similar News