தொடர் குண்டுவெடிப்பு வழக்கு.. 38 பேருக்கு தூக்கு.. 11 பேருக்கு ஆயுள்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

தொடர் குண்டுவெடிப்பு வழக்கு.. 38 பேருக்கு தூக்கு.. 11 பேருக்கு ஆயுள்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

Update: 2022-02-18 12:57 GMT

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 49 பேரில், 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேர்  காயம் அடைந்தனர்.

பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 49 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News