பாலியல் வன்கொடுமை – 8 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!!
பாலியல் வன்கொடுமை – 8 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!!
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல்துறை மேற்கொண்டு வருகிறது. விசாரணை சிறப்பு அதிகாரி எஸ்.பி முத்தரசி மேற்பார்வையில், டி.எஸ்.பி வினோதினி தலைமையில் 3 குழுக்களாக பிரித்து விசாரணையை சிபிசிஐடி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற சிபிசிஐடி போலீஸார் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் வீடுகளிலும் தனித்தனியாக சோதனை செய்தனர்.
8 பேரின் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வீட்டில் இருந்த செல்போன், பென் ட்ரைவ், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தனர். மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
newstm.in