கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவு அதிகம்.. எங்கு தெரியுமா..?

கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவு அதிகம்.. எங்கு தெரியுமா..?

Update: 2022-05-26 11:30 GMT

மதுரையில், கடந்த 2020 முதல் இன்று வரை 552 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பலாத்காரம் செய்ததாக நகரில் 185 வழக்குகளும், புறநகரில் 210 வழக்குகளும் அடங்கும். கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவு அதிகரித்து வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது; ‘பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ், வாரம் குறைந்தது இரு வழக்குகளாவது பதிவாகிறது. 2012-ல் அமலான இச்சட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது சம்பந்தப்பட்டவரை போலீசார் கைது செய்கின்றனர்.

பெரும்பாலும் பள்ளி மாணவியரை காதலித்து உறவு வைத்தல், திருமண வயதை அடையாத சிறுமியை திருமணம் செய்தல் போன்றவற்றில் தான் அதிக வழக்குகள் போக்சோவில் பதிவாகின்றன. அடுத்ததாக, சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, போதையில் தவறாக நடப்பது என வழக்குகள் பதிவாகின்றன.

மதுரை புறநகரில் 2020 முதல் 2022 மே 23-ம் தேதி வரை பலாத்காரம் செய்ததாக 210 வழக்குகளும், நகரில் 185 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புறநகரில் 97 வழக்குகளும், நகரில் 59 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

2020 - 2021-ம் ஆண்டில் கொரோனா காலத்தில் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

24 மணிநேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் (1098) எண் கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் சிறுமிகள், குழந்தைகள் உடனடியாக இதில் தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Similar News