பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!!

Update: 2022-06-29 06:00 GMT

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விஜயன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது அந்த பள்ளியில் 9 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் விஜயன், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்குச் சென்ற மாணவி, ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர்.

பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்பு தகவல் அறிந்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மாதேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது ஆசிரியர் விஜயன் மீது விசாரணை மேற்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று உத்திரவாதம் அளித்ததின் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

newstm.in

Similar News