மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!
கோவில்பட்டி அருகே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமம் வசந்த நகரைச் சேர்ந்தவர் அருள் சீலன் மகன் தாமஸ் சாமுவேல் (57).
இவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், அந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி பள்ளிக்கு நேரடியாகச் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல், 9 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.