சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. டாக்டர் தாத்தாவுக்கு இருக்கு சம்பவம் !!
சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. டாக்டர் தாத்தாவுக்கு இருக்கு சம்பவம் !!
48 பெண் நோயாளிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவர் தற்போது பிடிபட்டு தண்டனையின் பிடியில் சிக்கியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா சிங்(72) என்பவர், ஸ்காட்லாந்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பிரபலமான மருத்துவராக அறியப்பட்ட இவரிடம் ஏராளமான மக்கள் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அந்த வகையில், இவரிடம் சிகிச்சைப் பெற்ற பெண் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையிடம் டாக்டர் கிருஷ்ணா சிங் மீது புகார் ஒன்று அளித்தார்.
அந்தப் புகாரில் சிகிச்சையின்போது தன்னிடம் கிருஷ்ணா சிங் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து புகார் தொடர்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 35 ஆண்டுகளாக பெண் நோயாளிகளிடம் கிருஷ்ணா சிங் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்தது தெரியவந்தது.
‘இதுமட்டுமின்றி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, காவல் நிலையம் மற்றும் சிகிச்சையளிக்க வீடுகளுக்குச் சென்றபோதும் பெண் நோயாளிகளிடம் அவர் அத்துமீறியதாக தெரிகிறது. மொத்தம் 48 பெண் நோயாளிகளிடம் அவர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு கிளாஸ்கோ உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கிருஷ்ணா சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளது. சிறந்த மருத்துவ சேவைக்காக பிரிட்டிஷ் அரச விருதைப் பெற்றவா் கிருஷ்ணா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in