வயாகராவுடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை !!
வயாகராவுடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை !!;
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்ததோடு, பாடல்களுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. இவரது திருமணமே அப்படி தான் நடந்தது.
அதாவது, தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019ஆம் ஆண்டு ராக்கி சாவந்த் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அறிவித்தார். அதன்பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரிதேஷை ராக்கி சாவந்த் பிரிந்தார். தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். மும்பை விமான நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ராக்கி சாவந்த் பேசினார். பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டதாகவும் ஆனால் இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை. என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக உள்ளது.
நான் சோர்வடைந்து இருக்கிறேன். என் முகம் வீங்கி விட்டது. அரை மணி நேரம் கூட தூங்க முடியாமல் சிரமப்படுகிறேன். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் இந்த பூஸ்டர் டோஸ் ஷிலாஜித் அல்லது வயாகராவை ஒத்திருக்கிறது என அவர் கூறினார்.
இது தொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனாவை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசியை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் நடிகை ராக்கி சாவந்த். இவ்வாறு கூறியது ஏற்கத்தக்கது அல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர்.
newstm.in