ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த ஷகிலா.. வீடியோ வைரல் !!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த ஷகிலா.. வீடியோ வைரல் !!

Update: 2022-02-22 20:29 GMT

தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் கலக்கியவர் நடிகை ஷகிலா. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை ஓரங்கட்டும். இதனால் முன்னணி நடிகர்கள் கூட இவரது படங்களுடன் தங்கள் படங்களை வெளியிட தயக்கம் காட்டினர். 

ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் ஷகிலா திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர்.

இதனால் ஷகிலா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு மீட்டு அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோவை ஷகிலா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

newstm.in

Tags:    

Similar News