ரம்ஜான் பண்டிகையை சக வீரர்களுடன் கொண்டாடிய ஷமி மற்றும் ரஷீத் கான்..!
ரம்ஜான் பண்டிகையை சக வீரர்களுடன் கொண்டாடிய ஷமி மற்றும் ரஷீத் கான்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது . இந்த தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ள குஜராத் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடும். என்னதான் அறிமுக அணியாக இருந்தாலும் மீதம் இருக்கும் ஒன்பது அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது.பேட்டிங் , பவுலிங் ,என அனைத்திலும் கலக்கி வருகிறது .
இந்நிலையில் குஜராத் அணியின் ரஷீத் கான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய ஆஃப்கானிஸ்தான் வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர் முகமது ஷமி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.இந்நிலையில் இவர்களின் ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாக வருகிறது .