வைரலாகும் ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட்!!
வைரலாகும் ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட்!!
ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணமடைந்த நிலையில், அவருக்கு இரங்கள் தெரிவித்து ஷேன் வார்னே பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராட் மார்ஷ், கடந்த வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராட் மார்ஷ் மறைவையொட்டி அவருக்கு, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் ஷேன் வார்னே உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், நமது நாட்டின் தலைச்சிறந்த விளையாட்டு வீரரான அவர், இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
Sad to hear the news that Rod Marsh has passed. He was a legend of our great game & an inspiration to so many young boys & girls. Rod cared deeply about cricket & gave so much-especially to Australia & England players. Sending lots & lots of love to Ros & the family. RIP mate❤️
— Shane Warne (@ShaneWarne) March 4, 2022
ரோட் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு. RIP” எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தாய்லாந்தில் நேற்று மாலை ஷேன் வார்னே மாராடைப்பால் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே நாளில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு ஜாம்பவான்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பிரபலங்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in