கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அந்தப்பெண் அதை நிராகரித்துவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவன் மனம் திறந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவன் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இவர் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அதே போல் இந்திய அணிக்கும் தனது சிறப்பான பங்களிப்பை இவர் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஷிகர் தவன் தனது முந்தைய காலம் குறித்து மனம் திறந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்ட ஆரம்ப நாட்களில் ஒரு பெண்ணிற்கு காதலை சொல்லியதாகவும், ஆனால் அந்த பெண் தனது காதலை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காதலை நிராகரித்த பெண்ணிடம் ஷிகர் தவான் நீங்கள் கோஹினூர் வைரத்தை நிராகரித்து விட்டீர்கள் என தெரிவித்ததாக கூறியுள்ளார். ஷிகர் தவன் அண்மையில் அவரது மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in