அதிர்ச்சி! சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு!!
அதிர்ச்சி! சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு!!
தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாத் என்ற இடத்தில் தனியார் உப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்த போது, மதியம் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர், விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 12 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை. ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
newstm.in