அதிர்ச்சி! 33 வயது இளைஞருக்கு இருந்த கருப்பை, கருமுட்டை!!
அதிர்ச்சி! 33 வயது இளைஞருக்கு இருந்த கருப்பை, கருமுட்டை!!
சீனாவின் சிசுவான் என்ற பிராந்தியத்தை சேர்ந்த 33 வயது இளைஞர் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீர் கழிப்பதில் உபாதை ஏற்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். பொதுவாக இவர் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அடிக்கடி ரத்தமும் சிறுநீருடன் வெளியேறி தொந்தரவு அளித்து வந்துள்ளது.
தனக்கு ஏதோ சிறுநீரகப் பிரச்னை இருப்பதாக கருதி 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு கடந்தாண்டு தான் நோயின் உண்மை காரணம் தெரியவந்தது. பரிசோதனை செய்த போது, இவருக்கு பெண் பாலினத்தின் க்ரோமோசோம்கள் உடலில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இவருக்கு கருமுட்டை, கருப்பை போன்ற உறுப்புகள் உடலில் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே, தான் இவை சிறுநீரில் ரத்தமாக வெளியேறியுள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த தன்மைக்கு இன்டர்செக்ஸ் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அரிதான மருத்துவத்தன்மை கொண்டவர்களுக்கு அவர்களின் பாலினம் மட்டுமல்லாது எதிர் பாலினத்தின் க்ரோமோசோம்கள் மற்றும் உறுப்புகளும் இருக்கும்.
இந்த அரிதான பாதிப்பு 2,000இல் ஒருவருக்கு தான் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரத்தின் படி, உலக மக்கள் தொகையில் 0.05 முதல் 1.7 சதவீத பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த அரிதான தன்மை கொண்ட சீனாவைச் சேர்ந்த அந்த நபர் தனது பெண்ணுறுப்புக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க மருத்துவரிடம் கோரினார். இதையடுத்து 3 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உறுப்புகள் நீக்கப்பட்டன.
பின்னர் 10 நாள் சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இந்த சிகிச்சை இவருக்கு உடல் நிலை ரீதியான தாக்கத்தை விட மனரீதியாக கூடுதல் தாக்கம் ஏற்படும் என்பதால் அவருக்கு மனநல ஆலோசகர்கள் தொடர் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
newstm.in