அதிர்ச்சி! 39 வயது பெண் ஆர்.ஜே. மாரடைப்பால் மரணம்!!

அதிர்ச்சி! 39 வயது பெண் ஆர்.ஜே. மாரடைப்பால் மரணம்!!

Update: 2022-02-23 08:30 GMT

39 வயதே ஆகும் பெண் ஆர்.ஜே. ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா பெங்களூருவில் ஜே.பி. நகரில் வசித்து வந்தார். பிரபல ஆர்.ஜே.வான இவர் கன்னட படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 39 வயதான ரச்சனா உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

அப்படி இருக்கும்போது அவர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆர்.ஜே. ரச்சனா இறந்த செய்தி அறிந்த கன்னட திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News