அதிர்ச்சி! மணல் கடத்தல் வழக்கில் 6 பாதிரியார்கள் கைது!!

அதிர்ச்சி! மணல் கடத்தல் வழக்கில் 6 பாதிரியார்கள் கைது!!

Update: 2022-02-09 10:45 GMT

நெல்லை மாவட்டத்தில்  மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்லிடைகுறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய  நிலம் உள்ளது. அதில், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், என்பவருக்கு  எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்த ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.

எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அருகில் வண்டல் ஓடைகளிலிருந்து சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளி விற்பனை  செய்யப்பட்டது. இதுகுறித்த ஆய்வின் போது அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது  தெரியவந்தது.

நீதிமன்ற உத்தரவின் படி, போலீசார், ஒப்பதாரரான பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, சேரன்மகாதேவி உதவி ஆட்சியர்  9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி..டி., போலீசார் விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.சி..டி., போலீசார்மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் (69) மற்றும் ஐந்து பாதிரியார்களை  விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

newstm.in

Similar News