அதிர்ச்சி! 6 வயது சிறுவனை 3 ஆசிரியர்கள் அடித்ததாக புகார்!!

அதிர்ச்சி! 6 வயது சிறுவனை 3 ஆசிரியர்கள் அடித்ததாக புகார்!!

Update: 2022-04-18 07:00 GMT

தமிழ் எழுத்துக்களையும், ஆங்கில எழுத்துக்களையும் ஒழுங்காக எழுதவரவில்லை என்பதால் யூகேஜி மாணவனை 3 ஆசிரியர்கள் கடுமையாக அடித்ததாக புகார் எழுந்துள்ளது.

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார்கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் எல்கேஜி வகுப்புகளை படித்து வந்த அச்சிறுவன், நீண்ட நேரம் மொபைல் பார்த்தால் கண்களில் தண்ணீர் வரும் என்பதால் வகுப்புகளை கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு நேரடியாக யுகேஜி சென்றதால், சில பாடங்கள் சிறுவனுக்கு புரியாமல் இருந்திருக்கிறது. இதனால் கற்றலில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து உணராமல், மாணவன் முறையாக படிக்காததால் கடந்த ஒன்பதாம் தேதி சனிக்கிழமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு எடுத்துள்ளனர்.

அப்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் ஒழுங்காக எழுதவில்லை என்பதற்காக மாணவனிடம் கடுமையாக ஆசிரியர்கள் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது தமிழ் பள்ளி ஆசிரியை பிரின்சி என்பவர், கடந்த 9-ம்தேதி சிறுவனையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, வாந்தி எடுத்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின் சிறுவனுக்கு வாயில்நுரை வந்துள்ளது. குழந்தையின் நலன் கருதி அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.

தனது மகனை தாக்கிய பள்ளி தமிழ் ஆசிரியர் பிரின்ஸி, வகுப்பு ஆசிரியர் இன்டியனாவான், ஆங்கில ஆசிரியர் மோனோ பெராரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திரு.வி..நகர் போலீசில் மாணவனின் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி இந்திய தண்டனை சட்டப்பிரிவான 323- காயம் ஏற்படுத்துதல், மற்றும் சிறார் நீதி பாதுகாப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மூன்று ஆசிரியர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி ஜாமீனில் விடுவித்துள்ளனர். ஆனால் காவல்துறை தனது புகாரை மாற்றி விட்டதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் மாணவனின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

newstm.in

Similar News