அதிர்ச்சி! சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீ!!
அதிர்ச்சி! சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீ!!
சென்னையில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, திருவல்லிக்கேணி கஜபதி தெருவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயயை அனைத்தனர். எரிந்த காருக்கு யாரும் உரிமை கோரவில்லை. தீயில் முழுமையாக கார் எரிந்துள்ளதால் இந்த கார் யாரடையது என்பது அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த மெக்கானிக் கடை அருகே கார் தீ பிடித்து எரிந்ததால் பழதுபார்ப்பதற்காக கார் வந்திருக்குமோ என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது விஷமிகள் தீ வைத்து விட்டு சென்றார்களா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீ விபத்தில் இருந்து தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in