அதிர்ச்சி! மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு!!
அதிர்ச்சி! மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு!!
சென்னை கே.கே.நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் மங்கலம் நகரை சேர்ந்த வாணி கபிலன் (57) என்பவர் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் தமிழ் எழுத்தாளர். பல்வேறு கவிதை தொகுப்பு புத்தகங்களை எழுதி உள்ளார்.
இந்நிலையில் மாலை பணி முடிந்து காரின் பின்சீட்டில் அமர்ந்துகொண்டு தங்கையான எழிலரசியுடன் வீட்டிற்கு பயணம் செய்தார். கார் பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக வங்கி அருகே வந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்தது.
இதில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த வங்கி மேலாளர் வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் கார்த்திக் காயத்துடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவலறிந்த கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல் நசுங்கி பலியான வாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த எழிலரசி, கார் ஓட்டுநர் கார்த்திக் கே.கே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in