அதிர்ச்சி! பொதுவெளியில் பெண் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்!! VIDEO

அதிர்ச்சி! பொதுவெளியில் பெண் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்!! VIDEO

Update: 2022-05-16 08:47 GMT

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்கோட்டை விநாயக நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கீதா என்பவர் தனது வீட்டின் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மஹாந்தேஷ் என்பவர் திடீரென சங்கீதாவை கொடூரமாக தாக்கினார்.

அதில், படுகாயமடைந்த சங்கீதாவை பொதுமக்கள் பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு வழக்கறிஞர் சங்கீதா  சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மஹாந்தேஷை, ஒரு குற்ற வழக்கில் கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர். அப்போது மஹாந்தேஷ் வீட்டை போலீஸாருக்கு பெண் வழக்கறிஞர், காட்டியதாகக் கூறப்படுகிறது.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

இதனால் ஆத்திரமடைந்த மஹாந்தேஷ், வழக்கறிஞர் சங்கீதாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மஹாந்தேஷை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவெளியில் பெண் வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

newstm.in

Similar News