அதிர்ச்சி! சிலிண்டர் விலை மேலும் ரூ.268 உயர்வு!!
அதிர்ச்சி! சிலிண்டர் விலை மேலும் ரூ.268 உயர்வு!!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்படுகிறது. அதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது.
5 மாநில தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றத்தை கையில் எடுத்துள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.965.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.257 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.965.50ஆக தொடர்கிறது.
newstm.in