அதிர்ச்சி! மாமியார் கொடுமையால் மருமகள் தீக்குளித்து தற்கொலை!!

அதிர்ச்சி! மாமியார் கொடுமையால் மருமகள் தீக்குளித்து தற்கொலை!!

Update: 2022-06-24 06:45 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மாமனார், மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூத்தாநல்லூரை சேர்ந்த சூர்யா என்கிற ரகுவிற்கும்,  காளியம்மாளுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்தநிலையில் காளியம்மாளுக்கும் அவரது மாமனார் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி வீடு சம்பந்தமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து காளியம்மாள் வீட்டார் சமாதானம் பேசி ரவிக்கு சொந்தமான அந்த மாடி வீட்டை இரண்டாக  தடுத்து முன்பக்கத்தில் காளியம்மாளும் அவரது கணவரும் தங்கியுள்ளனர். பின்பக்கத்தில் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோரும் தங்கினர்.

இந்தநிலையில் காளியம்மாளுக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீடு சம்பந்தமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காளியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காளியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள்  உயிரிழந்தார்.

கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் காளியம்மாளுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Similar News