அதிர்ச்சி! போலி என்கவுன்ட்டர்… போலீஸூக்கு சிக்கல்!!

அதிர்ச்சி! போலி என்கவுன்ட்டர்… போலீஸூக்கு சிக்கல்!!

Update: 2022-05-20 20:05 GMT

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்  போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும், காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தரப்பினர் இந்த என்கவுண்ட்டரை கொண்டாடினர். மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனால் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது போலியான என்கவுண்ட்டரா,  என்கவுண்ட்டர் செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்த விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கென 3 பேர்கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக்குழு இரண்டுமுறை கால அவகாசம் பெற்று நீண்ட விசாரணையை நடத்தி தற்போது 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்டஅறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் அந்த 4 பேரையும் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கில் என்கவுண்ட்டர் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் என்கவுண்ட்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலைவழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

newstm.in

Similar News