அதிர்ச்சி! பிரபல கிரிக்கெட் வீரரின் தங்கை மரணம்!!
அதிர்ச்சி! பிரபல கிரிக்கெட் வீரரின் தங்கை மரணம்!!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தனது சகோதரியின் மரணத்தைத் தொடர்ந்து அணியிலிருந்து விலகியுள்ளார்.
ஹர்ஷல் படேல் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஹர்ஷல் படேலை ஆர்சிபி அணி 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் மும்பையை பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின்போது பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் படேலின் சகோதரி உயிரிழந்தார். போட்டி முடிந்தபிறகே ஹர்ஷல் படேலுக்கு இந்த துக்கச் செய்தி தெரியவந்தது.
இதையடுத்து ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார். ஹர்ஷல் படேல் குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாடுவதற்காக ஹர்ஷல் மட்டும் இந்தியாவில் தங்கியுள்ளார்.
ஹர்ஷல் படேலுக்கு உடன்பிறந்தவர்கள் மொத்தம் இரண்டு, ஹர்ஷல் படேல், தபன் படேல் மற்றும் அர்ச்சிதா படேல். ஹர்ஷலின் தங்கையான அர்ச்சிதா படேல் உயிரிழந்துள்ளார்.
அணியிலிருந்து விலகிய ஹர்ஷல் படேல், 12ஆம் தேதி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in