அதிர்ச்சி! ரேஷன் கடைகளில் மோசடி!!

அதிர்ச்சி! ரேஷன் கடைகளில் மோசடி!!

Update: 2022-03-07 18:34 GMT

சென்னையில் அரசின் மானிய பொருட்களை கையாடல் செய்த 15 ரேஷன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வடக்கு மற்றும் தெற்கு சரகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை பதிவுகள் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில்  ஆவடி, பெரம்பூர்திருவெற்றியூர், வில்லிவாக்கம், சோழிங்கநல்லூர், மதுரவாயல், மயிலாப்பூர் ஆகிய 7 மண்டலங்களில் உள்ள 15 கடைகளில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பது களப்பணியாளர்களின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நியாய விலைக் கடைகளில் 100 % பயோமெட்ரிக் முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்காமல் ப்ராக்ஸி முறையில் அமையும் விதமாக பட்டியலிட்டு, அரசின் மானிய பொருட்களை கையாடல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த நியாய விலைக் கடைப் பணியாளர்களின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

Similar News